அன்னையர் தினம்

ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  முத்துப்பேட்டை
தமிழ்தாத்தா உ. வே. சா. இலக்கிய மன்றம்

உத்தமதானபுறம் வேங்கட சுப்பய்யர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமாக அழைக்கப்பட்ட  தமிழ்தாத்தா உ. வே. சா. அய்யா அகார்களின் தமிழ்த்தொண்டினை நினைவு கூறும் வகையிலும், பருமைப்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில்  தமிழ்தாத்தா உ. வே. சா. இலக்கிய மன்றத்தின் துவக்க விழா நடைபெறும்.

இலக்கிய மன்ற துவக்க விழாவில் ஒவ்வோராண்டும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பெற்று வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இலக்கிய மன்ற நிறைவு விழாவில் தமிழ் ஆர்வலரை சிறப்பு விருந்தினராக அழைத்து எம் பள்ளி மாணவிகள் பங்கேற்கும் பட்டிமன்றத்திட்கு நடுவராக தலைமையேற்று சிறப்பிப்பதோடு இலக்கிய மன்ற துவக்க விழாவில் நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்.

இவ்விழாவில் மூலம் தமிழ் மொழியின் பெருமையையும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தொண்டாற்றிய தமிழ்தாத்தா உ. வே. சா. அவர்களின் பெருமையையும் பறைசாற்றும் வகையிலும் தமிழ்த்தாத்தா உ. வே. சா.இலக்கிய மன்றத்தின் துவக்க விழா மற்றும் நிறைவு என இரு விழாக்கள் மூலம் தமிழ் மொழியின் பெருமை உலகமெலாம் பரவும் வகையிலும் செயலாற்றி வருகின்றோம். 

No comments :

Post a Comment